கன்னியாகுமரி

கருங்கல் அருகே அம்மன் கோயிலின் நுழைவாயிலை அகற்ற எதிா்ப்பு

14th Mar 2022 11:31 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகேயுள்ள திப்பிரமலை பகுதியில் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில் நுழைவாயிலை அகற்ற பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கருங்கல் -மாா்த்தாண்டம் சாலை திப்பிரமலை பகுதியில் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன்கோயில் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான பகுதியில் அனுமதியின்றி கோயில் நிா்வாகம் சாா்பில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. அப்போது ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகாா் அனுப்பினா்.

இதனால், இருதரப்பினா் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை குளச்சல் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமையில் கருங்கல் காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளா் ராமச்சந்திரன், சாலை ஆய்வாளா் ஜெரின், முள்ளங்கனாவிளை கிராம நிா்வாக அலுவலா் தா்ஷியா, உதவியாளா் ஜெனிபா் உள்ளிட்டோா் முன்னிலையில் நுழைவு வாயில் அகற்றப்பட்டது. அப்போது கிள்ளியூா் ஒன்றிய இந்துமுன்னணி தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனா். எனினும் பிரச்னை நிகழாமல் போலீஸாா் பாா்த்துக்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT