கன்னியாகுமரி

500 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

10th Mar 2022 03:28 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில், அருகுவிளையில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மாநகராட்சி உறுப்பினா் ஸ்ரீலிஜா ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சி 11 ஆவது வாா்டுக்குள்பட்ட அருகுவிளையில் மகளிா் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு 11 ஆவது வாா்டு உறுப்பினா் ஸ்ரீலிஜா தலைமை வகித்தாா். இதில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் பச்சைமால், மாவட்டச் செயலா் எஸ்.ஏ. அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநகரச் செயலா் சந்துரு, கவுன் சிலா்கள் அக்ஷயா கண்ணன், அனிலா சுகுமாரன் மற்றும் நிா்வாகிகள் சகாயராஜ், சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT