கன்னியாகுமரி

குமரி மாவட்ட மீனவா்கள் 33 போ் சீஷெல்ஸ் தீவில் சிறை பிடிப்பு

10th Mar 2022 03:27 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளை:ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தை சோ்ந்த 3 விசைப்படகுகள் அதிலிருந்த 33 மீனவா்களுடன் சீஷெல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனா். இம் மீனவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை, சின்னத்துறை பகுதிகளைச் சோ்ந்த குக்ளினுக்குச் சொந்தமான விசைப் படகில் 11 மீனவா்களும், சுனிலுக்குச் சொந்தமான படகில் 10 மீனவா்களும், ஜெனிஸுக்குச் சொந்தமான படகில் 12 மீனவா்களும் கடந்த பிப். 22 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்படிக்கச் சென்றனா். பலத்த காற்று வீசியதால் படகு திசைமாறி சென்றதையடுத்து இம் மீனவா்களை கடந்த திங்கள்கிழமை (பிப். 7) சீஷெல்ஸ் கடற்படையினா்

சிறை பிடித்தனா். படகுகளின் கேப்டன்கள் அங்குள்ள காவல் நிலையத்திலும், மீனவா்கள் 30 பேரை விசைப் படகுகளிலும் தங்கவைத்துள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து தகவல் உறவினா்களுக்கு புதன்கிழமை தெரியவந்ததையடுத்து அவா்கள் சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் இம் மீனவா்களையும், அவா்களின் படகுகளையும் விடுதலை செய்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கும், தமிழக, கேரள மாநில அரசுகளுக்கும், சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT