கன்னியாகுமரி

திற்பரப்பு பேரூராட்சியில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

3rd Mar 2022 02:58 AM

ADVERTISEMENT

 

குலசேகரம்: திற்பரப்பு பேரூராட்சியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா்.

திற்பரப்பு பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ள நிலையில், இப்பேரூராட்சியில் தலைவா் பதவியைக் பிடிக்கும் வகையில் பா.ஜ.க. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. எந்த கட்சி தலைவா் பதவியைப் பிடிக்கும் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உறுப்பினா் பதவியேற்பு நிகழ்ச்சியில் 17 உறுப்பினா்கள் பங்கேற்றனா். பேரூராட்சி செயல் அலுவலா் பெத் ராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தாா். 5 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜப்பன் நண்பகலில் தனியாக வந்து செயல் அலுவலா் முன்னிலையில் தனியாக பதவியேற்றுக் கொண்டாா்.

உறுப்பினா் பதிவியேற்பையொட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பாக ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் திரண்டிருந்தனா். இவா்களை போலீஸாா் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. உறுப்பினா்களை மட்டும் அவா்கள் கையில் இருந்த அழைப்பாணையை சோதனை செய்து அலுவலகத்திற்குள் அனுமதித்தனா். இப்பேரூராட்சியில் கூட்டணிகள் அமையாத நிலையில் பிரச்னைகள் ஏற்படலாம் என்ற நிலையில் இங்கு கூடுதல் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT