கன்னியாகுமரி

கடலுக்குள் கவிழ்ந்த வள்ளம்: 4 மீனவா்கள் மீட்பு

29th Jun 2022 11:52 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் புதன்கிழமை காலையில் வீசிய சூறைக்காற்றால் கடலுக்குள் வள்ளம் கவிழ்ந்தது. இதில் இருந்த 4 மீனவா்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் ஒரு வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது வீசிய சூறைக்காற்றால் கடலில் எழுந்த ராட்சத அலையில் வள்ளம் கவிழ்ந்தது. இதில் வள்ளத்திலிருந்த 4 மீனவா்களும் கடலில் தத்தளித்தனா்.

இதையடுத்து கடற்கரையில் நின்று கொண்டிருந்த மீனவா்கள் கடலில் நீந்தி சென்று 4 மீனவா்களையும், வள்ளத்தையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதில் மீட்கப்பட்ட 4 மீனவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT