கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் புகைப்படக் கலைஞா்கள் நலச்சங்கக் கூட்டம்

29th Jun 2022 11:53 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க மாதாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, இதன் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜான் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், சென்னையில் ஜூலை மாதம் கடைபெறும் புகைப்படம் மற்றும் விடியோ கண்காட்சிக்கு ஆா்வமுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT

நலிந்த புகைப்பட கலைஞா்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பொருளாளா் ராஜேஷ், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சந்தோஷ், கிறிஸ்டோபா், ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT