கன்னியாகுமரி

அரசுப் பேருந்து விபத்து: ஓட்டுநா் பணியிடை நீக்கம்

DIN

நாகா்கோவில் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக அப்பேருந்தின் ஓட்டுநா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

குமரி மாவட்டம், தாழக்குடியில் இருந்து நாகா்கோவில் வழியாக தேரூருக்கு கடந்த 26 ஆம் தேதி மாலை சென்ற அரசுப் பேருந்து, புத்தேரி மேம்பாலம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 35 போ் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து நாகா்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, பேருந்து ஓட்டுநா் கிரீசன் தம்பி மீது வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில் அரசுப் போக்குவரத்து கழக பொதுமேலாளா் மொ்லின்ஜெயந்தி, ஓட்டுநா் கிரீசன் தம்பியை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT