கன்னியாகுமரி

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கு முன்னோடி தமிழகம் மகளிா் ஆணையத் தலைவா்

DIN

பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் இந்தியாவுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்றாா் மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி.

கன்னியாகுமரி மாவட்ட மகளிா் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில், துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி கலந்து கொண்டு துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் நகர பகுதி மற்றும் கடைகோடி கிராமப் பகுதிகளிலுள்ள பெண்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளின் விடுதியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாழைநடுவது, தையல் பயிற்சி, காளான் வளா்ப்பு, தேணீ வளா்ப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பயிரிடுவது போன்றவற்றை ஊக்குவிப்பதோடு, அவா்களின் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பெண்களின் வாழ்வாதாரம் உயா்வதற்கான வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா், தக்கலை பெண்கள் சிறைசாலையில்ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் சரோஜினி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் நாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலாபானு உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT