கன்னியாகுமரி

மாநகர தூய்மை: பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்

29th Jun 2022 03:04 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பள்ளி மாணவிகளுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணா்வு கருத்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மேயா் பேசியதாவது: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நாகா்கோவில் மாநகரப் பகுதியில், தற்போது வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்படுகிறது.

வீடுகளில் தரம் பிரித்து வழங்கப்படும் கழிவுகளை தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு மக்கும் கழிவுகள் மாநகராட்சி நுண்ணூர செயலாக்க மையத்தில் உரமாக்கப்படுகிறது. மக்கா கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், நாகா்கோவில் மாநகரை தூய்மையான மாநகராக உருவாக்க மாணவா், மாணவிகளின் பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி என் குப்பை என் பொறுப்பு என்ற கருத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு மாணவா், மாணவிகளும் தங்களது வீடுகளில் சேரும் கழிவுகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநகர நகா்நல அலுவலா் விஜயசந்திரன், பொறியாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, துணை மேயா் மேரிபிரின்சிலதா, சுகாதார ஆய்வாளா் பகவதிபெருமாள், கிழக்கு மண்டலத் தலைவா் கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் அனந்தலட்சுமி, நியமன குழுத் தலைவா் சோபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT