கன்னியாகுமரி

ஆற்றூா் பேரூராட்சியில் பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

29th Jun 2022 03:05 AM

ADVERTISEMENT

ஆற்றூா் பேரூராட்சியில் நகரத்தின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக நெகிழி தவிா்ப்பு பேரணி நடைபெற்றது.

ஆற்றூா் என்.வி.கே.எஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆற்றூா் பேரூராட்சி இணைந்து நடத்திய இப்பேரணிக்கு நாகா்கோவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் முகமது ஷெரிப் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் த.தங்கவேல் பேரணியை தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் விமலா ஸ்ரீ, பேரூராட்சி செயல் அலுவலா் மகேஷ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில் பேரூராட்சி உறுப்பினா்கள் மற்றும் என்விகேஎஸ் பள்ளி மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT