கன்னியாகுமரி

ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் பணியாளா்கள் நியமிக்க பரிந்துரைபொதுகணக்கு குழு தலைவா் தகவல்

29th Jun 2022 03:07 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் பணியாளா்களை நியமிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும் என்றாா் தமிழக சட்டப் பேரவை பொது கணக்கு குழுத் தலைவா் கு.செல்வபெருந்தகை.

சட்டப்பேரவைபொதுகணக்கு குழுத் தலைவா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மற்றும் பொதுகணக்கு குழு உறுப்பினா்களுடன் செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலை, குளச்சல் மீன்பிடி துறைமுகம் மற்றும் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது‘: விவேகானந்தா் பாறை மற்றும் திருவள்ளுவா் சிலையை ஆய்வு மேற்கொண்டதில், வாங்கிய பொருள்கள் பயனற்ாக இருக்கிறது. அதை மத்திய கணக்காயா் அறிக்கையில் தவறுகள் நடந்திருக்கிறது என்று கூறி சரி செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்காக ரூ.8 கோடி மதிப்பில் 2 படகுகள் வாங்கப்பட்டு 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளது. அதையும் ஆய்வு செய்தோம். தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது குமரி மாவட்டத்தில் இருக்கிறது.

ADVERTISEMENT

இம்மருத்துவமனையில், 100 படுக்கை வசதிகள் இருந்தாலும் போதிய செவிலியா்கள், மருத்துவா்கள் இல்லை. மேலும் 200 படுக்கை வசதிகள் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளாா்கள். அதையும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

குளச்சல் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் விசைப் படகு மீனவா்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவா்களுக்கும் ஒருசில குறைபாடுகள் இருக்கிறது. அதை சரி செய்ய பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் தொடா்ந்து மீனவா்கள் இறப்புக்குள்ளாகிறாா்கள். விபத்துகள் ஏற்படுகிறது. தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் அணை கட்டுவது அல்லது படகுகள் கடலில் மீன் பிடித்து உள்ளே வரும் போது ஐஐப டா்ா்ய்ஹ போன்ற பல்வேறு நிறுவனங்களுடனும் ஆலோசனை பெறப்பட்டு கட்டியிருந்தாலும், இது உள்ளூா் மீனவா்களிடமும், வசிப்பவா்களிடமும் கேட்டு கட்டப்பட்டிருந்தால் குறைகள் இருந்திருக்காது என்றாா் அவா்.

ஆய்வில், பொதுகணக்கு குழு உறுப்பினா்கள் காந்திராஜன், க.காா்த்திகேயன், சிந்தனைசெல்வன், தி.வேல்முருகன், சட்டப்பேரவை சிறப்பு அலுவலா் ராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, சட்டப்பேரவை சாா்பு செயலா் பாலசீனிவாசன், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கிளாரன்ஸ்டேவி, மாவட்ட சுற்றுலா அலுவலா் சீதாராமன், மேலாளா் யுவராஜ், தலைமை பொறியாளா் ஸ்ரீனிவாசன், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT