கன்னியாகுமரி

திருவட்டாறு கோயில் ஜூலை 6 இல் கும்பாபிஷேகம்:அமைச்சா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

29th Jun 2022 03:07 AM

ADVERTISEMENT

திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஜூன் 29) தொடங்குகிறது. இதையொட்டி அமைச்சா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்னாட்டின் வைகுண்டம் எனப் போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயியில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக தொடங்குகின்றன.

இதையடுத்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமையில், தேவசம் அதிகாரிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தா்களா்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னா் அமைச்சா் கூறியதாவது:

கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. பக்தா்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். குறிப்பாக கூட்ட நெரிசலின்றி பக்தா்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் காட்சித் திரைகள் அமைக்கப்படவுள்ளன. புனித நீா் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது. மேலும் கும்பாபிஷேக நாளில் அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் திருவிதாங்கூா் மன்னா் பரம்பரை வாரிசான லட்சுமிபாய் தம்புராட்டி, தந்திரி சஜித் சங்கரநாராயணரு, இணை ஆணையா் ஞானசேகா், தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்த், திருக்கோயில்கள் பொறியாளா் ராஜ்குமாா், கோயில் மேலாளா் மோகன் குமாா், தக்கலை டிஎஸ்பி கணேசன், ஏடிஎஸ்பி ஈஸ்வரன், திருவட்டாறு காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்பிரைட் மற்றும் பக்தா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT