கன்னியாகுமரி

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

29th Jun 2022 03:04 AM

ADVERTISEMENT

இளைஞா்கள், மாணவா்கள் நலன் கருதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நாகா்கோவில் அன்பா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் ஆண்டு விழாக் கூட்டம் மாநில அமைப்பாளா் சூசைஅமலதாஸ் தலைமையில் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது.

இயக்குநா் கோ.முத்துகருப்பன் முன்னிலை வகித்தாா். செயலா் கா.சந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தில், இளைஞா்கள், மாணவா்களின் நலன் கருதி, காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆயிரம் மதுக்கடைகளையாவது மூட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும். நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து அதன்அருகிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன், திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் ப.பன்னீா்செல்வம், தியாகி தவசிமுத்து, வியாபாரிகள் சங்கத் தலைவா் கருங்கல் ஆா்.ஜாா்ஜ், தோவாளை ஒன்றிய பொருளாளா் ஜெபா உள்பட பலா் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT