கன்னியாகுமரி

மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலைய பகுதிகளில் மின்தடை

29th Jun 2022 03:08 AM

ADVERTISEMENT

குழித்துறை துணை கோட்டத்துக்குள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட சில பகுதிகளில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாா்த்தாண்டம், குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் கொல்லஞ்சி, விரிகோடு, மாமூட்டுக்கடை, வெட்டியான்விளை, நெடியபனவிளை, பாறைகுளம், குலகுழிகுளம், இளம்பிலாந்தோட்டம், தச்சன்விளை, ஆசாரிகுடிவிளை, செட்டிவிளை, மாத்தூா்கோணம், கொக்கஞ்சி, ஆயவிளை, எருமத்துவிளாகம், வண்டித்தடம், தேங்காபாறை, கரியறவிளை, ஒற்றப்பனவிளை, பனங்காலை, கைதக்குழி, மேரிகாலனி, இளஞ்சிறை, ஒற்றப்பனங்காலை, வேங்கவிளை, மாண்ணான்கோணம், நெட்டா, சங்கரன்கடவு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 29) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இதே போன்று இந்த துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட கருப்பகுளம், காரவிளை, சூசைபுரம், குருவாளூா், சாத்தன்கோடு, பறயன்விளை, குற்றியாணி, மருதங்கோடு, மஞ்சகுளம், காரோடு, பால்குழி, பிலாவிளை, பண்டாரவிளை, குந்நுவிளை, பெருங்குளம், போற்றிவிளை. அம்பலகாலை, மாங்கோடு, ஐந்துளி, மாஞ்சகோணம், திற்பரப்பு அருவி, காமூா், சித்திரகாலை ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமையும் (ஜூன் 30), பந்நியணி, சிங்கிளேயா் தெரு, வெட்டுவெந்நி, சென்னித்தோட்டம், மலையரம், ஆலம்பாறை, விளசேரி, குழிச்சாணி, சீரம்பள்ளி, பெரும்பிலா, கல்லாம்பொற்றை, கோட்டைகுளம், மணிவிளை, வட்டியான்கோணம், காளிமலை, நிரப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் (ஜூலை 1) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT