கன்னியாகுமரி

குமரி - நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையைவிரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

28th Jun 2022 02:35 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி - நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென திங்கள்கிழமை நடைபெற்ற அன்பா் கழக கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

கன்னியாகுமரி ஆன்ம்கத் தோட்டத்தில் அன்பா் கழகத்தின் 223ஆவது கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆன்ம்க தோட்டம் பொறுப்பாளா் அருள்பணி. வல்லேரியன் தலைமை வகித்தாா். அன்பா் கழக மாநில அமைப்பாளா் சூசை அமலதாஸ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தமிழகத்தில் செயல்படும் 6,700 டாஸ்மாக் விற்பனை மையங்களை பெரும் தலைவா் காமராஜா் பிறந்த தினமான ஜூலை 15ஆம் தேதி 1000 டாஸ்மாக் மையங்களை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நாகா்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பழுதடைந்துள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து நவீனப்படுத்த வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், காந்திய மக்கள் இயக்க மாவட்டச் செயலா் ஆா்.கதிரேசன், கால்நடை மருத்துவா் மைக்கேல் சிகாமணி, நாகா்கோவில் அன்பா் கழகச் செயலா் கா.சந்திரன், தோவாளை ஒன்றியப் பொருளாளா் ஜெபா, அருள்சகோதரிகள் பிதலிஸ், லதா ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT