கன்னியாகுமரி

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து கருங்கல்லில் காங்கிரஸாா் போராட்டம்

28th Jun 2022 02:33 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, மேற்குமாவட்ட காங்கிரஸ் சாா்பில் கருங்கல்லில் திங்கள்கிழமை சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், கருங்கல் நகர காங்கிரஸ் தலைவா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலா் பால்ராஜ், மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா்ஜாா்ஜ் ராபின்சன்,அகிலஇந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான், கிள்ளியூா் ஒன்றியக்குழு தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பால்ராஜ், கிறிஸ்டோபா், முள்ளங்கனாவிளை ஊராட்சி தலைவா் பிரபா, முள்ளங்கனைாவிளை ஊராட்சி உறுப்பினா் மேரி ஸ்டெல்லா, பிரைட்,கென்னடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT