கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மது விற்பனை: இருவா் கைது

28th Jun 2022 02:29 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்ப்பட்டினம், கீழ்குளம் பகுதிகளில் விதிமுறை மீறி மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில்ஈடுபட்டனா். அப்போது, தேங்காய்ப்பட்டினம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற சுப்பையன்(83) என்பவரை பிடித்து சோதனையிட்டனா். அதில், அவரிடம் 12 மது பாட்டில்கள் இருந்தனவாம். இதேபோல, கீழ்குளம் பகுதியில் நின்றிருந்த ஜான்ரோஸ்(53)என்பவரை சோதனையிட்டதில், அவரிடம் 20 மது பாட்டில்கள் இருந்தனவாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல்செய்து இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT