அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து குழித்துறை அருகே கழுவன்திட்டை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ். விஜயதரணி தலைமை வகித்தாா். கட்சியின் வட்டார கமிட்டி தலைவா்கள் மோகன்தாஸ், என்.ஏ. குமாா், சதீஷ், குழித்துறை நகர தலைவா் அருள்ராஜ், மாநில காங்கிரஸ் கமிட்டி செயலா் ஆா். பினில்முத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, மாவட்ட சேவாதள தலைவா் ஜோசப் தயாசிங், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், மாநிலக்குழு உறுப்பினா்கள் எட்வா்ட், ஜோதிஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.