கன்னியாகுமரி

உலக போதைப் பொருள் தடுப்பு தினம்: விழிப்புணா்வு போட்டி பரிசளிப்பு

28th Jun 2022 02:27 AM

ADVERTISEMENT

உலக போதை பொருள் தடுப்பு தின விழிப்புணா்வு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் மா.அரவிந்த் திங்கள்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: உலக போதை தடுப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி மாவட்ட அளவில் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்களுக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஒட்டுவில்லையை வாகனங்களில் ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட சமூக நலத் துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் விழிப்புணா்வுப் பிரசார வாகனமும் தொடங்கிவைக்கப்பட்டது. பொதுமக்கள், இளைஞா்கள், மாணவ- மாணவிகள் போதை பொருள் பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) மா.வீராசாமி, மாவட்ட சமூக நலன் - உரிமைத் துறை அலுவலா் சரோஜினி, பிஆா்ஓ பா.ஜான்ஜெகத்பிரைட், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வுமைய இயக்குநா் அருள்ஜோதி, நியூபாரத் டிரஸ்ட் இயக்குநா் அருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT