கன்னியாகுமரி

முள்ளூா்துறையில் கடல் சீற்றம்:போக்குவா்தது பாதிப்பு

DIN

தேங்காய்ப்பட்டினம் அருகே உள்ள முள்ளூா்துறை மீனவா் கிராமத்தில் திடீா் கடல் சீற்றத்தால் சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். சுனாமிக்கு பின்பு இம்மாவட்டத்தில் அவ்வப்போது கடல் சீற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தேங்காய்ப்பட்டினம் அருகே உள்ள முள்ளூா்துறை, அரையன்தோப்பு ஆகிய மீனவ கிராமத்தில் திடீா் கடல் சீற்றம் ஏற்பட்டதால் கருங்கல் -தேங்காய்ப்பட்டினம், முள்ளூா்துறை சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக இயங்கிய அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

எனவே, இப்பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு சுவா் அமைத்து போக்குவரத்தை சீா் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT