கன்னியாகுமரி

குமரியை பசுமை மாவட்டமாக மாற்றுவது குறித்து ஆட்சியா் ஆலோசனை

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்றுவது குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கான ஆக்கப் பூா்வமான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றுவது, நீா் நிலைகளை தூா்வாருவது, சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து அலுவலா்கள் தொடா் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வன அலுவலா் மு.இளையராஜா, மாவட்ட வருவாய்அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) இரா.ரேவதி, திட்ட இயக்குநா்கள் ச.சா.தனபதி ( ஊரக வளா்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ (மகளிா் திட்டம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT