கன்னியாகுமரி

புதுக்கடை - பரசேரி மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

26th Jun 2022 01:53 AM

ADVERTISEMENT

 

புதுக்கடை - பரசேரி பழுதடைந்த மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்ட ராட்சத குடிநீா் குழாயை அகற்றி சாலையோரம், டி.ஐ. குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ . எஸ்.ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் நகா்புற வளா்ச்சி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை அமைச்சா் கே.என்.நேருவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு: குழித்துறை தமிரவருணி ஆற்றை நீரை ஆதாரமாக கொண்டு கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி கூட்டுக் குடிநீா் திட்டம் தொடங்கப்பட்டது.

அப்போது இச்சாலை நடுவே பதிக்கப்பட்ட ராட்சத குழாய்கள் தரமற்றமுறையில் பதிக்கப்பட்டதால் நீரின் அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்திய பின்பு கடந்த 2016 ஆம் ஆண்டு இச்சாலை சீரமைக்கப்பட்டது. எனினும் குழாயில் ஏற்படுகின்ற அழுத்தத்தால் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் 250 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, இந்த சாலையின் நடுவே பதிக்கப்பட்ட ராட்சத குழாய்களை அகற்றி சாலையோரம், டி.ஐ குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT