கன்னியாகுமரி

பத்மநாபபுரம் நகராட்சி:வீடு, கடைகளில் உறிஞ்சு குழி அமைக்க அறிவுறுத்தல்

26th Jun 2022 01:54 AM

ADVERTISEMENT

 

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துரிதமாக தங்கள் இடங்களில் உறிஞ்சி குழி அமைத்து கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிடவேண்டுமென்று நகராட்சி ஆணையா் லெனின் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சிக்குள்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கழிவு நீரை மழைநீா் வடிகாலில் விடுவதால் குளம் மற்றும் நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் வாராந்திர ஆய்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளபடி , நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த கழிவுநீா் குழாய்கள் அமைக்கும் பணியானது பொதுமக்கள் நலன் கருதி உறிஞ்சு குழி அமைக்க கால அவகாசம் வழங்கும் விதமாக ஜூலை 3 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி முதல் மீண்டும் இப்பணியானது நகராட்சி மூலம் தொடங்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் துரிதமாக தங்கள் இடங்களில் உறிஞ்சுகுழி அமைத்து கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிடவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT