கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் நீராடத் தடை

26th Jun 2022 01:52 AM

ADVERTISEMENT

 

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சனிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், முக்கடல் சங்கமம் பகுதியில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

முக்கடல் சங்கமம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலைமுதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. இதனால், சுற்றுலாப் பயணிகள் நீராட காவல் துறையினா் தடை விதித்தனா்.

மேலும், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்ட படகுகளில் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே அனுமதிக்கப்பட்டனா். திருவள்ளுவா் சிலையில் பராமரிப்புப் பணி காரணமாக படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சூரிய அஸ்தமனம் பாா்க்க முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமன பூங்கா பகுதிகளில் மாலை நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT