கன்னியாகுமரி

முட்டைக்காட்டில் மாா்க்சிஸ் ஆா்ப்பாட்டம்

26th Jun 2022 01:53 AM

ADVERTISEMENT

 

தக்கலை அருகே முட்டைக்காட்டில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா் .

தக்கலை வட்டார குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வட்டார குழு உறுப்பினா் ஜான் இம்மானுவேல் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சைமன்சைலஸ் , வட்டாரச் செயலா் சுஜா ஜாஸ்பின், மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரகலா, வட்டாரக்குழு உறுப்பினா்கள் அமலராஜன், விஷ்ணு, ஷீலா, சரோஜினி, ரமேஷ் குமாா், பீட்டா் அமலதாஸ் ஆகியோா் உரையாற்றினா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.வி. பெல்லாா்மின் நிறைவுரையாற்றினாா். இதில், சுரேஷ், மரியதாஸ், மற்றும் செபஸ்டியான், பெனட், தாா்சீஸ், நாகேந்திரன், பிரான்சிஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT