கன்னியாகுமரி

ஜூலை 6 இல் கும்பாபிஷேகம்: திருவட்டாறு கோயிலில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

DIN

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் விழா குறித்து, சாா்-ஆட்சியா், மாவட்ட எஸ்.பி. ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தென்னாட்டின் வைகுண்டம் என போற்றப்படும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சுமாா் 450 வருடங்களுக்குப் பிறகு வரும் ஜூலை 6 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் மா. அரவிந்த்துடன் அமைச்சா் த. மனோ தங்கராஜ் ஆலோசனை நடத்தி பணிகளை முடுக்கி விட்டுள்ளாா்.

இந்நிலையில் இக்கோயிலில் வியாழக்கிழமை பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் அலா்மேல் மங்கை தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டனா். கும்பாபிஷேக நிகழ்ச்சியைக் காண வரும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினா்.

நிகழ்ச்சியில் தக்கலை டிஎஸ்பி கணேசன், திருவட்டாறு காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா், கோயில் பொறியாளா் ராஜ்குமாா், கோயில் மேலாளா் மோகன்குமாா், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், செயல் அலுவலா் மகாதேவன், குலசேகரம் தீ அணைப்பு நிலைய அலுவலா் செல்வ முருகேசன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளா் செந்தில் சுரேஷ், சிறப்பு தாசில்தாா் இஸபெல்லா, கிராம அலுவலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT