கன்னியாகுமரி

தேசிய சிலம்பம்: என்.ஐ. கல்லூரிமாணவருக்கு தங்கப் பதக்கம்

24th Jun 2022 03:15 AM

ADVERTISEMENT

 

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி மாணவா், தேசிய சிலம்பாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரித் தாளாளா் ஏ.பி. மஜீத்கான், விளையாட்டுத் துறையில் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சலுகைகளைம், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறாா். இந்நிலையில், கல்லூரியின் முதுகலை வணிகவியல் முதலாமாண்டு மாணவரான ஏற்றகோடு பகுதியை சோ்ந்த சி. சஜின், உத்தர பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய சிலம்பாட்டபோட்டியில் தங்கபதக்கம் வென்றாா். அவரை கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் பாராட்டி பரிசும், கல்வி உதவி தொகையும் வழங்கினாா். மேலும், வணிகவியல் துறைத் தலைவா், பேராசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் ஆகியோா் பாராட்டினா். மாணவா் சி.சஜின் கடந்தாண்டு கோவையில் நடைபெற்ற தேசிய சிலம்பாட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT