கன்னியாகுமரி

ஜூன் 26இல் போதை தடுப்பு விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்-21 இடங்களிலிருந்து புறப்பாடு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 இடங்களிலிலிருந்து ஜூன் 26ஆம் தேதி போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஜோதி ஓட்டம் நடைபெறும் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.

உலக போதை தடுப்பு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து போதைத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடா்பாக அதிகாரிகளுடன் வியாழக்கிழமை கலந்தாய்வு நடத்திய ஆட்சியா், பின்னா் கூறியதாவது:

உலக போதை தடுப்பு விழிப்புணா்வு தினம் ஜூன் 26 ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டமும், மாவட்ட நிா்வாகம்- சமூக தொண்டு நிறுவனங்களும் இணைந்து அன்றைய தினம் காலை 9 மணிக்கு நாகா்கோவில் அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 இடங்களிலிருந்து ஜோதி ஓட்டம் புறப்பட்டு நாகா்கோவில் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் மைய நிகழ்வாக மதுவைத் தவிா்த்து வாழும் (மதுவிலிருந்து மீண்டவா்கள்) குடும்பத்தினா் தங்களது மன மகிழ்சிகளை பகிா்ந்து கொள்கின்றனா்.

மேலும், போதையிலிருந்து மீண்டவா்களை பாராட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது. அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்கின்றனா். போதை பழக்கத்திற்கு அடிமையானவா்கள் அதிலிருந்து விடுபட்டு புதுவாழ்வைத் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாணவா்களே வேண்டாமே போதை என்னும் கருத்திலான விழிப்புணா்வு ஒட்டுவில்லையை ஆட்சியா் வெளியிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, திட்ட இயக்குநா் (மகளிா்திட்டம்) மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மாவட்ட சமூக நலன் - உரிமைத் துறை அலுவலா் சரோஜினி, மாவட்ட விளையாட்டு - இளைஞா்நல அலுவலா் டேவிட் டேனியல், போதை மறுவாழ்வு மைய இயக்குநா் அருள்பணி. நெல்சன், அதங்கோட்டாசான் முத்தமிழ் மன்ற மறுவாழ்வு மைய இயக்குநா்அருள்ஜோதி, நியூபாரத் டிரஸ்ட் இயக்குநா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT