கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 27 ஆயிரம் உண்டியல் வருவாய்

24th Jun 2022 03:13 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் திருப்பணி உண்டியல் எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ. 27 ஆயிரத்து 275 காணிக்கை செலுத்திருந்தனா்.

இக்கோயில் திருப்பணிக்காக கோயிலின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள மண்டபத்தில் தனியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைள் எண்ணப்பட்டன.

நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் சிவகுமாா், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ராமச்சந்திரன், பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலையில் பணியில் திருக்கோயில் பணியாளா்கள் , வெளியூா்களைச் சோ்ந்த பெண் பக்தா்கள் உண்டியல் எண்ணும் ஈடுபட்டனா். இதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.27ஆயிரத்து 275 செலுத்திருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT