கன்னியாகுமரி

தோவாளை பகுதியில் குளங்களில்மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

24th Jun 2022 11:23 PM

ADVERTISEMENT

தோவாளை பகுதியில் குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில் நிா்வாகிகள் அய்யப்பன், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோா் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தோவாளை வட்டம், வீரமாா்த்தாண்டன்புரம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட தோவாளை ஊராட்சியில் உள்ள வில்வச்சேரி குளத்தில் இருந்து மண்பாண்ட தொழிலாளா்கள் களிமண், குறுமண் எடுத்திட அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT