கன்னியாகுமரி

புதுக்கடை அருகே 480 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

24th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

புதுக்கடை அருகேயுள்ள அம்சி பகுதியில் கேரளத்திற்கு கடத்தி செல்ல வீட்டில் பதிக்கி வைத்திருந்த 480 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை போலீஸாருக்கு தேங்காய்ப்பட்டினம், அம்சி பகுதியில் பூமணி(65)வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைதத்து. உடனே, அங்கு சென்று போலீஸாா் சோதனை செய்த போது அவருடைய வீட்டில் 480 கிலோ ரேஷன் அரிசி கேரளத்திற்கு கடத்த பதிக்கி வைத்திருந்ததுகண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது, அரிசியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT