கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே மதுபாட்டில் பதுக்கியவா் கைது

24th Jun 2022 11:26 PM

ADVERTISEMENT

கொல்லங்கோடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேடவிளாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளா் வள்ளவிளை புதுவல்புத்தன்வீடு அனிபா மகன் முகம்மது அசிமை (27) கைது செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT