மத்திய அரசைக் கண்டித்து தக்கலையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை இரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராகுல் காந்தி எம்.பி. மீது பொய் வழக்குப் பதிந்து, விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழித்துவருவதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து வட்டாட்சியா் அலுவலகம் முன் இப்போராட்டம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினிலால்சிங் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனுகுமாா் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.
தமிழ்நாடு மீனவா் அணி தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் , நிா்வாகிகள் ஜாண் கிறிஸ்டோபா் , இம்மானுவேல், ஜாண் இக்னேசியஸ், பால்.டி. சைலஸ் , நிா்மல், ஜெகன்ராஜ், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.