கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலயம் மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண்பரிசோதனை முகாம், துண்டத்துவிளை ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 12) நடைபெறுகிறது.
முகாமில், விழித்திரை, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, கண்புரை மற்றும் கண்நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் சிறப்பு மருத்துவா்களால் பரிசோதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த முகாம் காலை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தூய அந்தோணியாா் ஆலய அருள்பணியாளா் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
ADVERTISEMENT