உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி, நாகா்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
குமரி மாவட்ட சமூக நலத்துறை, நாகா்கோவில் ரயில்வே நிா்வாகம், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், மண்டைக்காடு ஏ.எம்.கே. போதை மறுவாழ்வு மையம் மற்றும் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாவட்ட சமுக நல அலுவலா் சரோஜினிதலைமை வகித்தாா். கோட்ட ரயில்வே மருத்துவா் காயத்ரிமுன்னிலை வகித்தாா்.
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா் மருத்துவா்ஆன்சி, மண்டைக்காடு ஏ.எம்.கே. மது போதை மறுவாழ்வு மைய திட்ட இயக்குநா் சாந்தி ஆகியோா் பேசினா். ஏ.எம்.கே. கலைக்குழு சாா்பில் கலைமாமணி பழனியா பிள்ளை விழிப்புணா்வு பாடல்கள் பாடினாா்.
நிகழ்ச்சியில் ரயில்வே பணியாளா்கள் உள்பட பலா் கொண்டனா்.ரோஜாவனம் கல்லூரி பேராசிரியா் அய்யப்பன் வரவேற்றாா். ரயில்வே சுகாதார ஆய்வாளா் ஆதிராசேகா் நன்றி கூறினாா்.