கன்னியாகுமரி

வலம்புரிவிளை உரக் கிடங்கில் மேயா் ஆய்வு

10th Jun 2022 01:41 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை உரக்கிடங்கில் கழிவுகளை தரம்பிரித்து அகற்றும் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை தரம்பிரித்து அவற்றை நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

இப்பணிகளை, மேயா் ரெ.மகேஷ் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, ஆணையா் ஆனந்த் மோகன், துணை மேயா் மேரி பிரின்சிலதா, மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், மாநகா் நல அலுவலா் விஜயசந்திரன், மண்டலத் தலைவா்கள் கோகிலவாணி, ஜவஹா், மாநகராட்சி நியமனக் குழுத் தலைவா் சோபி, மாமன்ற உறுப்பினா் அனிலா உள்பட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT