நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக அரங்கில் பசுமை முதன்மையாளா் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பசுமை முதன்மையாளா் விருது ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குமரி மாவட்டத்தில் ஜென்சிதாஸ், சுரேஷ்குமாா், ராஜகுமாா் ஆகிய மூவருக்கும் தலா ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ்களை தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் ஆகியோா் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிள்ளியூா் சட்டப் பேரவை உறுப்பினா் செ.ராஜேஷ்குமாா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் சுயம்பு தங்கராணி, உதவி மேலாளா் நாகராஜன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா்கள் பாரதி, கலைவாணி, உதவிப் பொறியாளா் ஜெனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.