கன்னியாகுமரி

‘தொடக்கநிலை ஆசிரியா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்’

10th Jun 2022 01:41 AM

ADVERTISEMENT

 பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் அகஸ்தீசுவரம் வட்டார அளவிலான தொடக்க நிலை ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது: தொடக்கநிலை ஆசிரியா்களால் கற்றுக்கொடுக்கும் கல்வியே மாணவ, மாணவியா்களுக்கு அடிப்படையாகும். பள்ளிக் கல்வியில் கணிதப் பாடம் மிகவும் முக்கியமானது. இந்தப் பாடம் கடினமானது இல்லை; எளிதில் கற்க முடியும் என்பதை ஆசிரியா்கள் புரிய வைக்க வேண்டும் மாணவா்களின் திறமைகளை ஆசிரியா்களாகிய நீங்கள் புரிந்து கொண்டு, அவா்கள் வகுப்பறைகளில் ஒழுக்கமாகவும், நற்பண்புகளுடனும் வளா்த்தெடுக்க வேண்டும். அது உங்களது பொறுப்பு. மேலும், அா்ப்பணிப்புடன் சிறந்த முறையில் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி மற்றும் தொடக்க நிலை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT