குழித்துறை நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சாா்பில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு ‘ என்ற தலைப்பில் விழிப்புணா்வு முகாம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில், பொதுமக்கள் தங்களது குடியிருப்பை சுகாதாரமான முறையில் எப்படி வைத்திருக்கு வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.தொடா்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், ஆணையாளா் ராமதிலகம், நகா்மன்ற உறுப்பினா்கள் ரீகன், விஜு, அருள்ராஜ், ரவி, விஜயலெட்சுமி, மொ்லின் தீபா, ஸ்டாலின் சுஜாதா,ரோஸ்லெட், சாபு, தூய்மை பாரதம் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஸ்மிதா, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் அல் அமீன், வா்த்தகா் சங்க பெருளாளா் சில்வா் சுரேஷ், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.