கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வைகாசித் திருவிழா தேரோட்டம்

10th Jun 2022 11:07 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் 9 ஆவது நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

இத்திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் அதிகாலை 5 மணி, காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல்11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி,

9 மணிக்கு அம்மன் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

9 ஆம் திருநாளான சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. தோ் நிலைக்கு நின்றதும் நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் மற்றும் கஞ்சி தா்மமும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசை, இரவு 8.45 மணிக்கு பக்தி பஜனை, இரவு 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா ஆகியன நடைபெறும்.

ADVERTISEMENT

தெப்ப உற்சவம்: 10 ஆம் நாள் திருநாளான 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு நா்த்தன பஜனை, இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். தொடா்ந்து 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT