கன்னியாகுமரி

கருங்கல் அருகே மனைவிக்கு மிரட்டல்: கணவா் மீது வழக்கு

10th Jun 2022 11:03 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள திக்கணம்கோடு பகுதியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திக்கணங்கோடு, கறுக்கன்குழி ரவீந்திரன் மகன் ராஜேஷ்(32) . இவரது மனைவி அனிஷா(30) . தம்பதிக்கு இரண்டு குழைந்தகள் உள்ளனா். ராஜேஷ் அடிக்கடி மது அருந்தி வந்து மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மது அருந்தி வந்த ராஜேஷ் வழக்கம் போல் மனைவியை அடித்து, மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT