கன்னியாகுமரி

கருங்கல் அருகே தொழிலாளி உயிரிழப்பு

10th Jun 2022 11:05 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிாளி உயிரிழந்தாா்.

கப்பியறை , கருக்குப்பனை ஆரிஸ் மகன் கேசரி(56). இவா், வெள்ளிக்கிழமை கேசரி அருகேயுள்ள தோட்டத்தில் மரம் ஏறும் போது தவறி விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT