கன்னியாகுமரி

அஞ்சுகூட்டுவிளை அந்தோனியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

10th Jun 2022 11:04 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளை புனித அந்தோனியாா் ஆலய 10 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அன்று மாலை 4 மணிக்கு திருக்கொடி நோ்ச்சை, மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை தொடா்ந்து திருக்கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை வகித்தாா். புதூா் பங்குத்தந்தை சாம் மாத்யூ மறையுரையாற்றினாா். விழாநாள்களில் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

10 ஆம் நாள் திருநாளான 19ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு சப்பரப்பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிா் நடைபெறும். இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT