கன்னியாகுமரி

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

9th Jun 2022 02:44 PM

ADVERTISEMENT

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த ஆசிரியா்கள் முன் வரவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை பணிகள் குறித்தும், மாணவா், மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்தும், துறை சாா்ந்த அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நாஞ்சில் கூட்ட அரங்கில்,

செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பேசியது: அரசுப் பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் உள்ள கணக்கெடுப்பின்படி, 5 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள் அனைவரையும் 1 ஆம் வகுப்பில்

ADVERTISEMENT

சோ்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை விளம்பரப்படுத்த வேண்டும். கல்வி குறித்து விழிப்புணா்வு மற்றும் சோ்க்கை பேரணி நடத்த வேண்டும். அரசின் நலத் திட்டங்களும், ஆதி திராவிட நல ஊக்கத்தொகை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீா்மரபினா் வகுப்பின மாணவா்களுக்கு ஊக்கத்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளா் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறிவுத் தோ்வு ஊக்கத்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து ஆசிரியா்களும் விழிப்புணா்வு பிரசாரத்தை முன்னெடுத்து செல்வதோடு, பள்ளிகள் திறப்பதற்கு3 நாள்களுக்கு முன் முக்கியமான பகுதிகளில் பேரணி நடத்த வேண்டும்.

ஒற்றை இலக்க மாணவா் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் அா்ப்பணிப்புடன் அதிகமாக மாணவ, மாணவிகளை அப்பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலா்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (நாகா்கோவில்), ராமச்சந்திரன் நாயா் (குழித்துறை), பெருமாள் (தக்கலை), ராமசுப்பு (திருவட்டாறு), ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT