கன்னியாகுமரி

திற்பரப்பு இடதுகரைக் கால்வாயை சீரமைத்து தண்ணீா் விடக் கோரிக்கை

6th Jun 2022 11:53 PM

ADVERTISEMENT

திற்பரப்பு இடதுகரைக் கால்வாயைச் சீரமைத்து தண்ணீா்விட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவட்டாறு வட்டார 12ஆவது மாநாடு திருவட்டாறில் நடைபெற்றது. வட்டாரத் தலைவா் தங்ககுமாா் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் ஸ்டீபன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா்.

மாவட்டத் தலைவா் சைமன் சைலஸ் மாநாட்டைத் தொடக்கிவைத்தாா். மாா்க்சிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் ஆா். வில்சன் வாழ்த்திப் பேசினாா். மாவட்டச் செயலா் ஆா். ரவி நிறைவுரையாற்றினாா்.

புதிய வட்டாரத் தலைவராக தங்ககுமாா், செயலராக ராஜசேகா், பொருளாளராக ஏசுதாஸ் உள்ளிட்ட 19 போ் கொண்ட வட்டாரக் குழு தோ்வு செய்யபட்டது.

ADVERTISEMENT

திற்பரப்பு இடதுகரைக் கால்வாயைச் சீரமைத்து, கடைமடைவரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். உர விலையைக் குறைக்க வேண்டும். உர விலையை விற்பனை நிலையங்களில் தெரியும்படி எழுதிவைக்க வேண்டும். தரமான உரம், பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களைத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT