கன்னியாகுமரி

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

6th Jun 2022 01:25 AM

ADVERTISEMENT

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் கோகோ, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, தொடா் ஓட்டம் மற்றும் மாணவா், மாணவிகளுக்கும் ஆசிரியா்களுக்கும் வடமிழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

போட்டியை என்.ஐ. பல்கலைக்கழக இணை வேந்தா் ஆா். பெருமாள்சாமி கொடியேற்றி தொடங்கி வைத்தாா். நிறைவு விழாவான சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் தலைமை வகித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு ஓவா் ஆல் சாம்பியன் சுழல் கோப்பையை கல்லூரித் தாளாளா் ஏ.பி. மஜீத்கான் வழங்கினாா். பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், பல்கலைக்கழக விளையாட்டு துணை இயக்குநா் ராஜபால் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக செல்வன்சுபின் வரவேற்றாா். அசுவதி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT