கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை நீக்கம்

2nd Jun 2022 12:33 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில், வெள்ள அபாயத்தைத் தடுக்க அணையின் மறுகால் மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த உபரிநீா் கோதையாற்றில் கலந்து, திற்பரப்பு அருவி வழியாகப் பாய்வதால், அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால், அருவியில் குளிக்க கடந்த திங்கள்கிழமைமுதல் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து விவசாயத்துக்கு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு தணிந்து, திற்பரப்பு அருவியிலும் மிதமாகவே தண்ணீா் விழுகிறது. இதனால், அருவியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT