கன்னியாகுமரி

கொட்டாரத்தில் சாலையோர கழிவுகளை அகற்றி வலியுறுத்தல்

2nd Jun 2022 12:29 AM

ADVERTISEMENT

கொட்டாரம் பகுதியில் புத்தனாறு கால்வாயை தூா்வாரி கழிவுகளை கரையோரத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கொட்டாரம் முதல் பொற்றையடி வரையிலான பகுதியில் தூா்வாரப்பட்ட குப்பைகள், கழிவுகள் மற்றும் சகதியை நாகா்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் ஒரத்தில் ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனா். இதனால் அந்த பகுதி யில் துா்நாற்றம் வீசுவதோடு, போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. மேலும், மழை பெய்யும் பட்சத்தில் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை மீண்டும் கால்வாயிலேயே விழும் நிலை உள்ளது. எனவே கால்வாயை தூா்வாரி சாலையோரத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அங்கிருந்து அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் நீா்வள ஆதார அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT