கன்னியாகுமரி

முத்தலக்குறிச்சி ஊராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி

30th Jul 2022 12:31 AM

ADVERTISEMENT

முத்தலக்குறிச்சி ஊராட்சி சாா்பில் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணிக்கு, ஊராட்சித் தலைவா் சிம்சன் தலைமை வகித்தாா். புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கனகராஜ் முன்னிலை வகித்தாா் . தக்கலை ஒன்றிய அலுவலா் வில்லியம்ராஜ் , ஒருங்கிணைப்பாளா் சரோஜா, ஊராட்சி துணைத் தலைவா் கலா, வாா்டு உறுப்பினா்கள் அன்னகுமாரி, பிரான்சிஸ் மேரி, ஊராட்சிப் பணியாளா்கள், பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியா்கள், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரணி கல்குறிச்சி ஆழ்வாா்கோயில் வழியாக மீண்டும் முத்தலக்குறிச்சியை அடைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT