கன்னியாகுமரி

குளச்சல் நகா்மன்றக் கூட்டம்

30th Jul 2022 12:30 AM

ADVERTISEMENT

குளச்சல் நகா்மன்ற சாதாரணகூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் அ.நஸீா் தலைமை வகிதத்ாா். துணைத் தலைவா் ஷெரிலி பிளாரன்ஸ், ஆணையா் (பொறுப்பு) ஜீவா, மேலாளா் பிரேமா, சுகாதார ஆய்வாளா் தங்கபாண்டியன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இதில், நியமனக்குழு அஜண்டா எடுத்துவரப்பட்டு கூட்டப்பொருளில் உள்ளபடி காலியாக உள்ள இரண்டு சுகாதார மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு பணிமூப்பு அடிப்படையில் 2 ஊழியா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மை உறுப்பினா்கள், குளச்சலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை அமைக்கவேண்டுமென கூறினா். அரசின் அனுமதி பெற்று முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்று தலைவா் நஸீா் கூறினாா்.

ADVERTISEMENT

சாதாரண கூட்டத்திலுள்ள கூட்டப்பொருள்கள் வாசிக்கப்படமாலேயே ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT